Saturday, January 28, 2006

நாங்கள் குட்டிச் சாத்தான்களா?

"பேய்க்கு வாழ்க்கைப் பட்டவ புளியமரத்துல ஏறித்தானே ஆகணும்.."
சலித்துக் கொண்டு கிளம்பினான் கணவன்.

"ஆமா..இருபது வருஷமா நான் அதைத் தான் செய்துட்டு இருக்கேன்" என்றாள் மனைவி.

குழந்தைகள் திகைத்தன. "அப்படி என்றால் நாங்க பேய்க்கும் பேய்க்கும் பிறந்த குட்டிச் சாத்தான்களா ?" என்று கேட்டன.

குழந்தைகள் கேள்வியில் கணவனும் மனைவியும் மிரண்டனர்.
இனிமேல் குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடாமல் இருக்கலாம் என்று உறுதி செய்து கொண்டனர்.

பெற்றோர் பல பாடங்களை குழந்தைகளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது போலும்!

6 Comments:

Anonymous Anonymous said...

good posts.. write more.

3:05 PM  
Blogger றெனிநிமல் said...

நன்றி மடியிலி.

நல்ல கதை தான்.

3:29 AM  
Blogger மதியிலி said...

பெயர் தெரிவிக்க விரும்பாதவருக்கு!
பாராட்டுக்கு நன்றி

11:59 AM  
Blogger மதியிலி said...

றெனிநிமல்!
நன்றி..எனக்கு மடி இருக்கு:-))

12:01 PM  
Blogger மணியன் said...

வாங்க வாங்க, தமிழ்மணத்தில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்க.

3:44 PM  
Blogger மதியிலி said...

நன்றி மணியன்..

9:24 PM  

Post a Comment

<< Home